யூடியூபர்ஸ்களுக்கு வந்த புதிய சிக்கல் - மத்தியரசுக்கு 4 வாரம் கெடு.!
chennai high court order to central government answer youtube close issue
சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறை வகுக்க வேண்டும் என்று வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கு மாறாக யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என்றுக் கூறி, சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால், காவல்துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை.
இதனால், பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழ்நாடு அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
English Summary
chennai high court order to central government answer youtube close issue