இருசக்கர வாகனத்தால் ஏற்படும் சாலை விபத்துகள் - சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் காயமடைந்த பெண் பல் மருத்துவருக்கு ரூ.18 இலட்சம் இழப்பீடு வழங்க கூறி காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், பல் மருத்துவர் சார்பில் தான் சரியாக பணிகளுக்கு சென்று வந்திருந்தால் எனது வருமானம் இதற்கும் மேல் இருக்கும். ஆகையால் தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இது தொடர்பான மனு இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், " வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாகனங்கள் தயாரிக்கும் போதே அவை பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகம் மட்டுமே காரணமாக அமைகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், எக்ஸ்பிரஸ் சாலையில் (அதிவிரைவு சாலை) 120 கிமீ வேகத்தில் பயணம் செல்லலாம் என மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

பள்ளிப்பாடத்திட்டத்தில் சாலை விதிகளை சேர்த்து மத்திய, மாநில அரசுகள் மாணவ - மாணவியருக்கு துவக்கத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Order Central and State Govt about Two Wheeler Speed Controller 21 April 2021


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal