ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - கடலூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கெடு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தமிழக அரசு சார்பில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் தான் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் வழிபாட்டுத் தலங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கரை அடையாளம் காண சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்.

இன்னும் ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai hc order to cuddalore district collector for vallalar sathya gnana saba issue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->