சொத்துகுவிப்பு வழக்கில் மீண்டும் சிக்கிய ஓபிஎஸ்! உயர்நீதிமன்றம் அதிரடி!
Chennai HC Order for OPS Case 30082023
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை, தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஓ பன்னீர்செல்வம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

சிவகங்கை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அவர் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.
2001 முதல் 2006ம் ஆண்டு நடந்த அதிமுக ஆட்சி காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ பன்னீர் செல்வத்தின் மீது லஞ்ச ஓழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஓபிஎஸ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களின் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai HC Order for OPS Case 30082023