ரம்ஜான் நோன்பு - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு.!
chennai corporation announce government muslim employees leave officer before one hour
முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இந்த ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு சடங்கு, விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் இருப்பது ஆகும்.
ரமலான் நோன்பு விதிகளின் படி முஸ்லிம்கள் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருக்க வேண்டும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் விதமாக இன்று முதல் 31 வரை 30 நாட்கள் மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- "பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக இன்று முதல் 31.03.2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai corporation announce government muslim employees leave officer before one hour