சென்னையில் சிங்கிள் 'டீ' ரூ.30 ஆகலாம்... சிலிண்டர் விலை உயர்வால் தேநீர், உணவகங்கள் தவிப்பு! கொந்தளிப்பில் மக்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ₹993 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலிண்டரின் விலை ₹3,237 ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக நகரின் பல உணவன்கள் விறகுக் கட்டை உள்ளிட்ட  மாற்று எரிபொருளைத் தேடிச் செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த விலை உயர்வு நேரடியாக உணவகத் தொழிலைப் பாதித்துள்ளது. ஏற்கனவே பல சாலையோர உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. இயங்கி வரும் சில இடங்களிலும் இட்லி, தோசை போன்ற உணவுகள் கிடைப்பதில்லை; சப்பாத்தி, இடியாப்பம் போன்ற குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த உணவக உரிமையாளர்களுக்கு, இந்த சிலிண்டர் விலை உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் எஞ்சியிருக்கும் உணவகங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, ஒரு கப் தேநீரின் விலை எவ்வளவு உயரும் என்பது சாமானிய மக்களின் கவலையாக உள்ளது. தற்போது ₹15 முதல் ₹20 வரை விற்கப்படும் தேநீர் விலை, ₹2 முதல் ₹10 வரை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. முக்கிய நகரப் பகுதிகளில் ஒரு கப் டீ ₹40 வரை கூட உயர வாய்ப்புள்ளது.

உணவுக்காகச் செலவழிக்க வழியில்லாமல் ஒரு வேளைத் தேநீரைக் குடித்துப் பசியாறும் தொழிலாளர்களுக்கு இது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்கள் வருகை குறையும் என்ற அச்சத்தில் சில கடைக்காரர்கள் விலையேற்றத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடலாம் என்றாலும், உணவகத் தொழில் மீண்டும் மீளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Commercial Gas Price Shock Tea and Food Prices Set to Soar


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->