சிறை காவலரால் சீரழிந்த வாழ்க்கை.. சிறுமி எடுத்த விபரீத முடிவு.. உயிருக்கு போராடும் சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகரில் உள்ள பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்று வந்துள்ளார். எந்த நேரத்திலும் கையில் அலைபேசியுடன் முகநூலில் மூழ்கிக் கிடந்த சிறுமிக்கு, ஆறு மாதங்களுக்கு முன்னதாக அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் பழக்கம் ஆகியுள்ளார். 

அவர் புழல் சிறையில் காவலராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சிறுமியிடம் பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ள நிலையில், பல இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மகேஷ் பேசாமல் இருக்கவே, மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மகேஷிடம் நேரில் சென்று நியாயம் கேட்டதற்கு, நான் நண்பராக பழகினேன் என்றும், என்னை உங்களால் ஏதும் செய்ய முடியாது என்றும் கூறி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நியாயம் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் இருந்த பெற்றோர்கள் சிறுமியிடம் இருந்து அலைபேசியை பறித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிறுமி, தனது வாழ்க்கை சீரழிவுக்கு காரணமாக இருந்த மகேஷை பழிவாங்க வேண்டும் என்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடல் முழுவதும் தீயினால் கருகி 80 விழுக்காடு தீ காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக எம்.பி.கே காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Child girl suicide due to Love Failure by Puzhal Jail Prisoner Magesh


கருத்துக் கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா?
Seithipunal