சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி பயணிகள் கவனம்...! பல மின்சார ரெயில்கள் ரத்து அறிவிப்பு...!
Chennai Central Gummidipoondi passengers attention Many electric trains cancelled
சென்னை சென்ட்ரல்–கூடூர் ரெயில் பிரிவில், எண்ணூர் -அத்திப்பட்டு புதுநகர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 5.30 மணி வரை மொத்தம் 6 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவ்வகையில், மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், 11.20 மணிக்கு புறப்படும். மேலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை அதிகாலை 4.15 மணிக்கு மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை நோக்கி புறப்பட வேண்டிய ரெயில், மற்றும் அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்ட்ரல் வர திட்டமிடப்பட்டிருந்த 2 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 10.35, 11.20 மணிகளிலும், நாளை அதிகாலை 4.15, 4.50 மணிகளிலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
English Summary
Chennai Central Gummidipoondi passengers attention Many electric trains cancelled