ஆன்லைன் வகுப்பிற்காக காத்திருந்த சிறுமியின் அலைபேசிக்கு ஆபாச குறுந்தகவல்.. வேன் உதவியாளரின் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு, வீட்டிலேயே இருந்து கல்வி கற்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த பலரும் மாற்று பணிகளுக்கு சென்றுள்ளனர். 

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி, ஆன்லைன் வகுப்பிற்காக அலைபேசியுடன் காத்திருந்த நிலையில், ஒரு அலைபேசி எண்களில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும், அதில் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு, தன்னுடன் வாட்ஸ்அப் சேட்டிங்க்கு வருமாறு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவிக்கவே, அவர்கள் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து அந்த அலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்கையில், அந்த மாணவி படிக்கும் பள்ளியின் வேன் ஓட்டுனருக்கு உதவியாளராக பணியாற்றி சூசை சத்யராஜ் என்பவன் மாணவிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்பியது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொள்ளத் துவங்கினார். மேலும், அவனது செல்போனில் உள்ள வாட்ஸ் அப்பில் இருந்து பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பெயரில், ஐந்தாம் வகுப்பு மாணவிகள் இருந்து எட்டாம் வகுப்பு மாணவிகள் வரை ஆபாச படங்கள் அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

மாணவிகளின் வாட்ஸ்அப் எண் சம்பந்தம் இல்லாத நபர்களின் கைக்குச் சென்றால், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற காரியங்களுக்கு உடற்பயிற்சி ஆசிரியரின் பெயரை எதற்காக பயன்படுத்தினார்?, உடற்பயிற்சி ஆசிரியர் மாணவிகளிடம் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Girl sexual torture sent WhatsApp Porn Images by Van Helper


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->