ரெயில் சேவையில் மாற்றம்: சென்னை வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரம்...! - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டத்தில் நடைபெற்று வரும் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை முன்னிட்டு, சில முக்கிய ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் அறிவித்துள்ளது.

பயணிகள் சிரமமின்றி பயணிக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து 8-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்படும் கோவை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06182), வழக்கமான பாதையைத் தவிர்த்து ரேணிகுண்டா – பகலா – காட்பாடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

அதேபோல், அசாம் மாநிலம் திப்ருகாரிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் (22504), 8-ந்தேதி திட்டமிட்ட நேரத்தை விட 1 மணி 45 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையிலும் நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பயணிகள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே சரிபார்த்து, மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Changes train services Maintenance work intensified Chennai routes


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->