மத்திய இரயில்வே அதிரடி உத்தரவு... அதிரடியாகும் இரயில்வே அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 140,523,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 3,012,128 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 119,339,648 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய இரயில்வே அமைச்சகம் சார்பில் பிற பிராந்திய இரயில்வே மண்டல தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், " இரயில்வே வளாகத்தில் முக கவசம் அணியாத பட்சத்தில், விதியை மீறி செயல்படும் நபர்களுக்கு இரயில்வே அதிகாரிகள் ரூ. 500 வரை அபராதம் விதிப்பார்கள். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த  சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் " என்று உத்தரவிட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Railway Announce Penalty to Train Travelling Without Facemask 17 April 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->