மத்திய அரசு இதில் பாரபட்சம் காட்டுகிறது...  கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


தி.மு.க சார்பில் மதுரையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, இன்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக சிறு,குறி தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிக அளவில் மனு வழங்கியுள்ளனர். 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தமிழகம் வரும்போது சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்காக நிவாரண நிதி ஒரு ரூபாய் கூட தரவில்லை. 

முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளாக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. அனைத்து கட்சிகளையும் முதலமைச்சர் அரவணைத்து தான் செல்கிறார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. 

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். மத்திய அரசு தென் மாவட்டங்களுக்கு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வருகிறது. ரயில்வே திட்டங்களுக்காக நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt reducing funds kanimozhi MP accusation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->