நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு தமிழகம், புதுவைக்கு நிதி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரி புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கி விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. தகுந்த நேரத்தில் ஈடுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. 

புயலால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், மத்திய குழு தமிழகத்திற்கு வந்து சேத விபரங்களை கணக்கிட்டு சென்றது. இந்நிலையில், தமிழகத்திற்கு ரூ.285 கோடி புயல் சேதங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், புயல் சேதங்களுக்கான நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.285 கோடியில், ரூ.223.77 கோடி புரெவி புயலுக்கும், ரூ.63.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Govt Fund Release to Tamilnadu and Pondicherry Nivar and Purevi Cyclone


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->