நாடு முழுவதும் 2.17 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் - மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி செய்தி!
Central Govt fake rupee note
மத்திய அரசு மக்களவையில் நேற்று தெரிவித்ததாவது, 2024-25 நிதியாண்டில் நாடு முழுவதும் 2.17 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில் இது 2.23 லட்சமாக இருந்தது.
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் அளித்த தகவலின்படி, 2024-25-ல் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளில் ரூ.500 நோட்டுகள் அதிகம் காணப்பட்டன. மொத்தம் 1,17,722 ரூ.500 நோட்டுகள், 32,660 ரூ.200 நோட்டுகள், 51,069 ரூ.100 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த, நோட்டுகளின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. 2021-22-இல் 7.6 சதவீதமாக இருந்தது, 2022-23-இல் 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசின் பல துறைகளில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Central Govt fake rupee note