#Breaking: எஸ்.பி.பி, சாலமன் பாப்பையா, கோவை தொழிலதிபருக்கு விருது அறிவித்தது மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


குடியரசு தினத்தினை ஒட்டி மத்திய அரசு பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை பெரும் நபர்களின் பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், பத்ம விபூஷண் விருது மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் ஷாஹோ ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலமன் பாப்பையா, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், கோயம்புத்தூர் தொழிலதிபர் சுப்பிரமணியன், மருத்துவர் திருவேங்கடம், கோவாவின் முன்னாள் கவர்னர் மிருதுலா சின்ஹா உள்ளிட்ட 120 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce Padma Vibhushan and Padma Shree Awards 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->