சிபிசிஐடியிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு வரப்போகும் புதிய சிக்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பாஜக நெல்லை தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து, சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஒப்படைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID investigation nayinar nagendran case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->