திமுக, பாஜகவினர் மீது வழக்கு பதிவு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த 26ம் தேதி சென்னை மெரினா டாக்டர் பெசன்ட் சாலையில் லேடி வெலிங்டன் பள்ளி எதிரே பாஜக சார்பில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர் வாக்காளர் முகாமில் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சிறிது நேரத்தில்  கலவரமாக மாறியது. இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக சார்பில், 116 வட்ட செயலாளர் அயோத்திகுப்பம் சசிகுமார் மற்றும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் படி போலீஸார் பாஜக திருவல்லிக்கேணி மண்டல துணை தலைவர் சுமன், மீனவர் அணி மாநில செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கிளை பொறுப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் பாஜக மண்டல துணை தலைவர் சுமன் அளித்த புகாரின் பேரில் திமுக வட்ட செயலாளர் சசிகுமார், திமுக பிரமுகர்கள் ஜாக்கி, ரஞ்சித் ஆகியோர் மீதும் அதே பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on dmk and bjp parties


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->