ரிவர்ஸ் எடுத்த கார்… உயிரிழந்த 4 வயது சிறுமி...! - தென்காசியில் கொந்தளிக்கும் குடும்பத்தினர்...!
Car reverse 4 year old girl dies Family turmoil Tenkasi
தென்காசி அருகே சங்கரன்கோவில் பகுதியில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி வளாகத்தில் காரை பின்னோக்கி எடுத்தபோது, யு.கே.ஜி படித்த 4 வயது சிறுமி சிவ யாழினி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காயமடைந்த சிறுமியை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த தகவலை பெற்றோருக்கு உடனடியாக தெரிவிக்காமல், குழந்தையின் புத்தகப்பையை மட்டும் வீட்டிற்கு அனுப்பியதாக தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் சூழல் பதற்றமாக மாறியது.
மேலும், காவலர்கள் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதுமட்டுமின்றி சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காரை ஓட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஓட்டுநர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
English Summary
Car reverse 4 year old girl dies Family turmoil Tenkasi