இனி ஜெயிலை விட்டு வர முடியாது...! பாளையங்கோட்டை, மதுரை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்ட நெல்லை குற்றவாளிகள் 2 பேர்...! பின்னணி என்ன...?
Cant leave jail anymore Two criminals lodged Palayankottai and Madurai central prisons What background
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த நவின் (25) ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்குநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரிந்துரை செய்தார்.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சின்ராசு (23), சிறுமி தொடர்பான பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையவராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி பரிந்துரை அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நவின் மதுரை மத்திய சிறையிலும், சின்ராசு பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Cant leave jail anymore Two criminals lodged Palayankottai and Madurai central prisons What background