சமூகவலைத்தளங்களில் பரவிய வேட்பாளர் பட்டியல் போலியானது - பாஜக அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது.

அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி, தூத்துக்குடி தொகுதியில் நடிகை ராதிகா, கோவை தொகுதியில் ஏ.பி.முருகானந்தம், திருநெல்வேலி தொகுதியில் நயினார் பாலாஜி உள்பட 11 தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பட்டியல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் என்று பரவும் இந்த பட்டியல் போலியானது என்று தமிழக பா.ஜனதா தங்களின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

candidate list fake bjp annaounce


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->