புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி - நேரில் நலம் விசாரித்த விஜய்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜயுடன் நடிகர்கள் அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும், இந்த விழாவில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த நடிகர் விஜய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று புஸ்ஸி ஆனந்திடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று முன்தினம் நடந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சியைத்தொடர்ந்து, ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bussy anand addmitted hospital for health issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->