ஓய்வுபெற்ற தலைமைச் செயலக அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை...! - 22 பவுன் நகைகளைத் திருடிய இருவர் கைது - Seithipunal
Seithipunal


சென்னை பெரவள்ளூர் பெரியார் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமைச் செயலக இணைச் செயலாளர் அசோக்குமார், கடந்த 17-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வேளச்சேரி சென்றிருந்தபோது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

வீட்டிலிருந்த 22 பவுன் தங்க நகைகள், பட்டுப் புடவைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது.இது குறித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த முருகன் (என்ற தீனா) மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைதான முருகனின் மீது ஏற்கனவே 15 திருட்டு வழக்குகளும், ஜெகதீஷ் மீது 3 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இருவரிடமிருந்தும் திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Burglars Break Retired Secretariat Official Home Two Arrested Stealing 22 Sovereign Jewelry


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->