ஓசி பிரியாணிக்கு சண்டை.. ஓனருக்கு கத்திக்குத்து.. ஓசி சோறு கும்பல் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஓசி பிரியாணி கேட்டு கடை உரிமையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பிரியாணி குறித்த சம்பவங்கள் இணையதளத்தில் பெருமளவு பேமஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் ஈ.சி.ஆர் சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் சபீர் அகமது (வயது 36). இந்த கடைக்கு சென்ற குமார் என்பவர் பிரியாணி கேட்டுள்ளார். 

பிரியாணிக்கு பணம் தரும்படி கேட்ட நிலையில், பிரியாணிக்கு காசு தர முடியாது என்று கூறியுள்ளார். காசு தராமல் பிரியாணி இலவசமாக வழங்க இயலாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரை சார்ந்த ஏழு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் நேற்று ஹோட்டலை சூறையாடியுள்ளனர். 

இதனை தடுக்க முயன்ற சபீர் அகமதை கத்தியால் குத்தி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சபீர் அகமதை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இவர்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் வினோத் என்பவரின் அணியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்து, ஓனரை கத்தியால் குத்திய கோஷ்டியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Briyani shop owner murder attempt due to free Briyani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal