கோவில் அறங்காவலர் பொறுப்பு வழங்க வேண்டும்.!! பிராமணர்கள் சங்கம் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில் உள்ள கேரள மலையாளி சங்க அரங்கில் தமிழ்நாடு பிராமண சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கோவை மாவட்ட பிராமணர் சங்க தலைவர் சங்கர் தலைமை வகிக்க சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்க மாநில உரிமைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர் "நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பிராமண சமுதாயங்களை இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிராமண சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. தகுதியுள்ள பிராமணர்களை தமிழக கோவில்களில் அறங்காவலர் பொறுப்பு வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brahmins association ask TNgovt temple trustee


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->