மகளின் கள்ளக்காதலை கண்டித்து பெற்றோரை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலன்.! - Seithipunal
Seithipunal


மகளின் கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்றோருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே பச்சலாக்கவுண்டனூர் பகுதியில் ராஜேந்திரன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு அமுதா என்ற மகள் இருக்கிறார். 

இவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்ட நிலையில், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த காளிமுத்துவுக்கும், அமுதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமுதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காளிமுத்துவையும் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து தக்க சமயம் பார்த்து வீட்டில் இருந்து வெளியே வந்த ராணி மற்றும் ராஜேந்திரனை காளிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy brutal attack of lover parents


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal