சிறுவன் அடித்து கொலை.. பிணத்துடன் 2 நாட்கள் இருந்த குழந்தை! - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே5 வயது சிறுவனை, அவனது தாயின் 2-வது கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் செல்வமதன்,36 வயதான  இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார் . அதன்பின்பு செல்வமதன், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த செல்வி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். செல்விக்கு ஏற்கனவே 5 வயதில் அபிநவ் என்ற மகன் உண்டு. மேலும் செல்வமதனுக்கும், செல்விக்கும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக செல்வமதனின் வீடு பூட்டி கிடந்தநிலையில்  வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில்  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது  வீட்டில் உள்ள ஒரு அறையில் சிறுவன் அபிநவ் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். .

பிணத்தின் அருகில் ஒன்றரை வயது குழந்தை சுயநினைவு இன்றி மயங்கி கிடந்தது. உடனே அந்த குழந்தையை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அபிநவ்வை அவனது வளர்ப்பு தந்தை செல்வமதன் அடித்துக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதில் “செல்வமதன் த. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த மாதம் செல்வி தனது மகன்களை வீட்டில் தனியாக விட்டு விட்டு மாயமானார்.

அவர் எங்கே சென்றார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து செல்வமதன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். மேலும் வீட்டில் செல்வமதன், அபிநவ் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். மனைவி மாயமானதால் ஆத்திரத்தில் அவர் சிறுவன் அபிநவ்வை ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்தார். தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தையை வீட்டுக்குள் விட்டுவிட்டு கதவை பூட்டிகொண்டு தப்பி ஓடினார்.மேலும் தப்பி ஓடிய செல்வமதனைபோலீசார் தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy beaten to death. Baby spent 2 days with dead body


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->