பிரபல நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..சென்னையில் பரபரப்பு!
Bomb threats to the homes of famous actors Sensation in Chennai
சென்னையில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், என பல இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் , சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னை போயஸ் கார்டனில் அமைந்து உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் மற்றும் கீழ்பாக்கத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
English Summary
Bomb threats to the homes of famous actors Sensation in Chennai