மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை.!!
bomb threat to madurai airport
தமிழகத்தில் செயல்படும் விமான நிலையங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி விரைந்து வந்த போலீசார் மதுரை விமான நிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் மதுரை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

கடந்த 28-ந் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
bomb threat to madurai airport