திண்டுக்கல் : நூறு நாள் வேலைசெய்யும் மக்களிடம் கட்சிக்கு நிதி கேட்ட பாஜக நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் பகுதியை சேர்ந்த பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் என்பவர் வேலை நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு, அவர் நூறு நாள் வேலை செய்யும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் வேலையாட்களிடம், “எங்கள் கட்சிக்கு நிதி கொடுங்கள். உங்களுக்கு சம்பளம் மோடி ஆட்சியில் இருந்து தான் வழங்கப்பட்டு வருகிறது" என்று தரக்குறைவான வார்த்தைகளை பேசியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, பிரசாத் கடந்த 8ம் தேதி மீண்டும் நூறு நாள்வேலை பணியாளர்களிடம் சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரசாத்திடம், "பணம் தர முடியாது. உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு, காவல் துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவரிடம் இனிமேல் இதுபோன்று பணம் வாங்க மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு பிறகு அவரை அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், போலீசார் பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp secaretary demanding money to 100 days scheame employees


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->