#Breaking: போலீசுக்கே புளிப்பு மிட்டாய் கொடுத்த பாஜக.. திருத்தணியில் அதிரடி நடவடிக்கை.. மாஸ் காண்பித்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


திருத்தணியில் இன்று பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையை, மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தொடக்கி வைக்க, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருத்தணிக்கு புறப்பட்டனர். அவருடன் எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.

திருத்தணி நோக்கி தனது தொண்டர் படையுடன், எல்.முருகன் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் படை சூழ, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த பயணம் தொடங்கியுள்ளது. ஆனால், இவர்களை காவல்துறையினர் இடையிலேயே தடுத்து நிறுத்திய நிலையில், எல்.முருகன் திருத்தணிக்கு சாமிகும்பிட செல்வதாக கூறியதை அடுத்து, அவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இருந்தாலும் வழிநெடுக பாஜக தொண்டர்கள் அவருடன் இணைந்துகொண்டனர்.

தமிழக முதல்வர் ஊட்டியில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கையில், " சட்டம் தன் கடமையை கட்டாயம் செய்யும். அனைவருக்கும் சட்டம் என்பது பொதுவானது " என்று தெரிவித்தார். மேலும், திருத்தணிக்கு நான் மட்டும் செல்வதாக கூறிவிட்டு, காவல்துறையினர் சென்றதும் படையுடன் புறப்பட்ட எல்.முருகன் திருத்தணிக்கு சென்றடைந்தார். 

இந்த நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய எல்.முருகன் உட்பட திருத்தணியில் திரண்டு இருந்த பாஜகவினரை மொத்தமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Party Members arrest in Thiruthani including BJP Tamilnadu Leader L Murugan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->