இருக்கை மாற்ற மறுத்ததால் பயணியை தாக்கிய பாஜக எம்எல்ஏ – வீடியோ வைரல்!
BJP MLA attacks passenger for refusing to change seats Video goes viral
வந்தே பாரத் ரயிலில் இருக்கை மாற்ற மறுத்ததற்காக, பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பயணி ஒருவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 19ஆம் தேதி, டெல்லி–போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணி ஜன்னலோர இருக்கையை முன்பதிவு செய்து பயணித்திருந்தார். அந்த நேரத்தில் உத்தரப்பிரதேசம் ஜான்சி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங், தனது குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
ராஜீவ் சிங், அந்த பயணியிடம் ஜன்னலோர இருக்கையைத் தன்னுடைய குடும்பத்தாருக்காக மாற்றுமாறு கேட்டார். ஆனால் பயணி அதை மறுத்தார். இதனால் கோபமடைந்த எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களை ஜான்சி ரயில் நிலையத்தில் ஏற்றி, அந்த பயணியை தாக்கச்செய்ததாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது பயணியின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியானது.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. காங்கிரஸ் பேச்சாளர் சுப்ரியா ஷ்ரினேட், இது தொடர்பாக:
“பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் என சொல்லப்படுகிறது. வெறும் இருக்கையை மாற்ற மறுத்ததற்காக ஒரு பயணியை தாக்கியது அதிர்ச்சிகரமானது”, எனக் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வெளிவரவில்லை. தாக்கப்பட்ட பயணி போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
BJP MLA attacks passenger for refusing to change seats Video goes viral