பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.! ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபாலன் பணி ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் அந்த பகுதியில் உள்ள உத்திராதி மடத்தில் மேலாளராக இருந்து வந்தார். கோபாலனின் மகன் வாசுதேவன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளராக இருந்தவர்.

இந்த நிலையில் உத்திராதி மடத்திற்கு சொந்தமாக நாச்சியார் கோவிலை சுற்றி உள்ள பல கிராமங்களில் சொத்துக்கள் கட்டிடங்கள் நிலங்கள் உள்ளது. இதில் நாச்சியார் கோயிலில் உள்ள ஒரு கடையில் நாச்சியார்கோவில் பாஜக நகர தலைவராக பதவி வகித்த சரவணன் என்பவர் டைலர் கடை நடத்தி வந்துள்ளார்.

மடத்தின் நிர்வாகிகள் நாச்சியார் கோவிலில் இருந்த மடத்திற்கு சொந்தமான அனைத்து கடைகளையும் காலி செய்ய சொல்லியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த அனைவரும் தங்களது கடைகளை காலி செய்து விட்ட நிலையில், பாஜக நகர தலைவர் சரவணன் மட்டும் தனது கடையை தனது டைலர் கடையை காலி செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மடத்தின் சார்பில் கோபாலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற தீர்ப்பு மடத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சரவணன் கடை அகற்றப்பட்டது. இதனால் கோபாலன் மீது ஆத்திரமடைந்த சரவணன் ஜூலை 1 ஆம் தேதி தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த கோபாலனை சரவணன் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதனிடையே சரவணனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பாஜக நகர தலைவர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp member arrested in gundas act


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->