வேகத்தடைக்கு வெள்ளை கோடு.. சமூக சேவகியான இளம் பெண் மருத்துவர்.! குவியும் பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


பெண் மருத்துவர் ஒருவர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ள சம்பவம் பெருங்களத்தூர் அருகே பாராட்டுகளை குவித்து வருகின்றது. 

பெருங்களத்தூர் முதல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் வழியே கொளப்பாக்கம் செல்கின்ற முக்கிய சாலையில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக வேகத்தடைகள் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.  

நாளடைவில் அந்த வேகத்தடையில் போடப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கோடுகள் அழிந்து போனது. எனவே, அந்தக் கோடுகளை மீண்டும் போடும் நடவடிக்கையில் பாஜகவின் மாவட்ட மருத்துவ பிரிவு பெண் நிர்வாகியான மஞ்சு பிரியா ஈடுபட்டுள்ளார்.

அவர் சாலையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கின்ற பணி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bjp Doctor women Paint Of Speed Breaker in Perungalathur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->