20 தொகுதிகளில் களமிறங்கும் பாஜக - அண்ணாமலைக்கு எந்தத் தொகுதி?
BJP contest in 20 constituencies tamilnadu
2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருந்தாலும், தமிழகத்தில் அந்தக் கட்சியின் நிலை பெரிய அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பல அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் பாஜக தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகளில் களம் இறங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பாஜகவைவிட வடதமிழ்நாட்டில் செல்வாக்கு நிறைந்த பாமகவுக்கு பாஜக கூட்டணியில் வெறும் 7 இடங்களைத்தான் அண்ணாமலை ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது. அதாவது 2024 தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்தச் செய்தி இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இந்தத் தகவல் சக கூட்டணிக் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக போட்டியிடும் அந்த 20 தொகுதிகள் எவை?
தூத்துக்குடி- சசிகலா புஷ்பா
கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்தான்
நெல்லை - நயினார் நாகேந்திரன்
சிதம்பரம் - தடா பெரியசாமி
விருதுநகர் - ராம சீனிவாசன்
கிருஷ்ணகிரி – கேஎஸ் நரேந்திரன்
ஈரோடு – கேபி ராமலிங்கம்
சேலம் - ஜி.கே.நாகராஜன்
திருப்பூர் - கனகசபாபதி
நீலகிரியில் எல்.முருகன்
வடசென்னை - பால் கனகராஜ்
மத்திய சென்னை - குஷ்பு
தென் சென்னை - கரு நாகராஜன்
கோவை - அண்ணாமலை.
இந்தத் தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் அமமுக மற்றும் ஒபிஎஸ் அணிக்கு 7 இடங்களும், புதிய நீதிக்கட்சி, ஜான்பாண்டியன் மற்றும் ஐஜேகேவுக்கு தலா 1 இடமும், தேமுதிகவுக்கு 2 இடங்களும் பாஜக கூட்டணி ஒதுக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
English Summary
BJP contest in 20 constituencies tamilnadu