ஸ்டாலினுக்கு முதலமைச்சராக தொடரும் தார்மீகப் பொறுப்பு இருக்கிறதா? - ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கொந்தளிக்கும் அண்ணாமலை!
BJP Annamalai Condemn to BSP Armstrong murder
சென்னை : பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் இன்று இரவு 7.30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அண்ணாமலையின் செய்திக்குறிப்பில், "சென்னையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவ்ல் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுடன் உள்ளன.

நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது.
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைத்து விட்டு, திரு முக ஸ்டாலின் மாநில முதலமைச்சராக தொடரும் தார்மீகப் பொறுப்பு அவருக்கு இருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to BSP Armstrong murder