இணைப்பு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை..MLA சந்திர பிரியங்கா துவக்கி வைத்தார்!
Bhoomi Pooja for Link Road MLA Chandra Priyanka inaugurated
காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய்-6,18,00,000/-மதிப்பீட்டில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.Drசந்திர பிரியங்கா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று 30.04.2025 காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய்-6,18,00,000/-மதிப்பீட்டில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட அண்டூர், கழுகுமேடு,தொண்டமங்கலம், கொன்னகாவெலி ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.Drசந்திர பிரியங்கா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.Drசந்திர பிரியங்கா கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார் .

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்,என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
English Summary
Bhoomi Pooja for Link Road MLA Chandra Priyanka inaugurated