குடித்தால் உடலுக்கு கேடு என்று இங்கு தடை செய்யப்பட்டதை ஆப்பிரிக்காகாரன் ஆரோக்கியம் என்று குடிக்கின்றான்..? தவறாக சித்தரித்தது யார்.? - Seithipunal
Seithipunal


கள்ளை பற்றிய சிறு அறிமுகம்,

கள் என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் குறைவான  போதை ஏற்படுத்தும் பானம் ஆகும். பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது.

இந்த பானம் புளிப்பு கலந்த சுவையுடன் உள்ளது. இதை அருந்துபவர்களுக்கு  போதை ஏற்படுகிறது.

பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு,

மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள் ஆகும்.

பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.

பனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.

பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கள் குடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பதற்கும், விற்கும் கள்ளை வாங்கிக் குடிப்பதற்கும் 01-01-1987ல் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கள் இறக்கிக் குடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை.

தகவல் உரிமைச் சட்டப்படி கள் தடைக்கான காரணத்தை அரசு தரப்பு கொடுத்துள்ளது. பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளில் போதை குறைவு.

கூடுதலான போதை வேண்டும் என்பதற்காக குளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து விற்றார்கள். வாங்கி குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு பனை மரமும் ஒரு உற்பத்திச் சாலை என்பதால் கள் கலப்படத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அவரவர் தேவைக்கு கள்ளை இறக்கிக் குடிப்பதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது. இறக்கிய கள்ளை விற்போர் மற்றும் வாங்கிக் குடிப்போர் மீது மட்டுமே அரசின் இந்தத் தடைச் சட்டம் பாயும்.

தை மாதத்தில் இது ஆரம்பிக்கும். ஆகவே வரும் 2018 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முதல் பனை, தென்னை, ஈச்ச மரங்கள் வைத்திருப்போர் அவரவர் சொந்தத் தேவைக்கு ஏற்ப கள் இறக்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள் என தமிழ்நாடு கள் இயக்கம் கூறியுள்ளது..

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சதிதான் இந்த தொழில் நசிந்து போனதற்கு காரணம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

banned drink in tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->