போலி இந்திய கடவுச்சீட்டு: வெளிநாடு செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டவர்: சென்னை விமான நிலையத்தில் கைது..! - Seithipunal
Seithipunal


போலி ஆவணங்களின் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 19-ஆம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி, அபுதாபி செல்லும் விமான பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர்.  அப்போது அங்கு வந்த உத்தம் உராவ், என்பவரின் ஆவணங்களை பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர், வைத்திருந்த இந்திய பாஸ்போர்ட் போலியானது என்பதும், இவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, குறித்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, நேற்று (21.10.2025) சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் உத்தம் உராவை ஒப்படைத்துள்ளனர். இது குறித்து புகார் கொடுத்ததின் பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையாளர் அருண், உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் A. ராதிகா. அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சீட்டு மோசடி, கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில், போலி கடவுச்சீட்டு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், பிடிபட்ட நபர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த உத்தம் குமார், வயது 25. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மேற்கு வங்களாத்தில் வசித்துக் கொண்டு, உத்தம் உராவ் என்ற பெயரில் ஆதார் கார்டு, வாக்களார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து அதன்பேரில், போலியான பெயரில் இந்திய கடவுச்சீட்டு பெற்று, அபுதாபி செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் உத்தம் குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து போலியான இந்திய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான்அட்டை, பங்களாதேஷ் அடையாள அட்டை மற்றும்கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladeshi national arrested at Chennai airport for trying to travel abroad using a fake Indian passport


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->