பயணிகள் கவனத்திற்கு! இந்திய ரயில்வேயின் மெகா பிளான்! - ஒரே ஆண்டில் 7,914 புதிய ரயில் பெட்டிகள்...!
Attention passengers Indian Railways mega plan 7914 new train coaches single year
இந்தியாவில் அதிகரித்து வரும் ரெயில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில்வே வாரியம் பல்வேறு முன்னேற்றமான மாற்றங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பழமையான ரெயில் பெட்டிகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்.எச்.பி. (LHB) பெட்டிகள் தயாரிப்பில் கணிசமான உயர்வு காணப்படுகிறது.

இந்த உற்பத்தி பணிகளில், சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஐ.சி.எப். தொழிற்சாலை, பஞ்சாபின் கபூர்த்தலாவில் உள்ள ஆர்.சி.எப். தொழிற்சாலை மற்றும் உத்தரபிரதேசத்தில் செயல்படும் எம்.சி.எப். தொழிற்சாலை ஆகியவை முக்கிய பங்காற்றி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில்கள், மின்சார ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து வகை பெட்டிகளும் துல்லியமாக தயாரிக்கப்படுகின்றன.ரெயில் பெட்டி உற்பத்தி ஆண்டுதோறும் உயர்ந்து வரும் நிலையில், 2025-26 நிதியாண்டில் மொத்தம் 7,914 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது, 2024–25 நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட 7,134 பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 11 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது.
மேலும், 2004 முதல் 2014 வரை ஆண்டுக்கு சராசரியாக 3,300-க்கும் குறைவான பெட்டிகளையே தயாரித்து வந்த இந்திய ரெயில்வே, தற்போது நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப இணைப்புகளின் மூலம் உற்பத்தியை இரட்டிப்பு அளவிற்கு உயர்த்தியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கப்படுகின்றனர்.
பயணிகளின் வசதியும் பாதுகாப்பும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ரெயில்வே துறை தொடர்ந்து தன்னைத்தானே புதுப்பித்து, எதிர்கால தேவைகளுக்கு தயாராகி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Attention passengers Indian Railways mega plan 7914 new train coaches single year