நடைபாதைக்காக தகராறு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல்..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்கியவர்களை தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாபுரத்தில் வசித்து வருபவர் கில்பர்ட் ராஜன்.  இவருக்கு திருமணமாகி பிரதிஷா டேனி  என்ற மனைவி இருக்கிறார். கில்பர்ட் ராஜூக்கும் அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரினுக்கும் இடையே அவர்களின் நடைபாதை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

//

இந்நிலையில்,  சம்பவதன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏஞ்சல் சகாரின் தனது தம்பியுடன்  சேர்ந்து கில்பர்ட் ராஜன், அவரது கர்ப்பிணி மனைவி பிரதிஷா டேனி மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கில்பர்ட் காவல்நிலையத்தில்புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assault on five including a pregnant woman in a dispute over a sidewalk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->