பாஜக திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட ஆறுமுகசாமி ஆணையம்! இன்பத்தில் திளைக்கும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக செயற்குழு உறுப்பினர்களால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

தர்மயுத்தத்தின் கோரிக்கையாக ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அப்பொழுது கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கட்சியிலிருந்து திருமதி சசிகலாவை நீக்கினால் பழனிச்சாமி உடன் இணைந்து செயல்படுவேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்றதால் பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டனர். மேலும் கட்சி ரீதியில் ஓ.பன்னீர் செல்வதற்கு ஒருங்கிணைப்பாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது.

தற்பொழுது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை கோரிக்கையால் அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக லாப நட்டக் கணக்கு போட்டு அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்க விரும்புகிறது மத்திய பாஜக. அதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடியும் கொடுத்து வந்தது. இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய கருத்தை தனக்கு கேடயமாக பயன்படுத்த உள்ளார் பழனிச்சாமி.

சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸை இணைத்துச் செயல்பட்டால் வாக்கு வாங்க முடியாது. எனவே சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைத்து செயல்படுவது சாத்தியமற்றது என பாஜக மேல் இடத்திற்கு பழனிச்சாமி தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த காரணத்தை பாஜகவால் தட்டி கழிக்க முடியாது என பழனிச்சாமி தரப்பு உறுதியாக நம்புகிறது. மேலும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியாகும் பொழுது ஓ.பி.எஸ் தன்னுடன் இருந்திருந்தால் சமாளிக்க வேண்டிய நிலைக்கு பழனிச்சாமி ஆளாகி இருப்பார்.

ஆனால் தற்பொழுது அதிமுகவில் இருக்கும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் ஆறுமுகம் சாமி ஆணையத்தால் விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் ரீதியில் சமாளிக்க இபிஎஸ் தரப்பு திட்டம் தீட்டி வருகிறது. இப்போது இருக்கும் சூழலால் பழனிச்சாமிக்கு எந்த நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை என்பதால் இன்பத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arumugasamy commission has blocked BJP plans EPS was happy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->