அரியர் மாணவர்கள் தேர்ச்சியில் திடீர் திருப்பம்! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இறுதிப் பருவத் தேர்வுகளை தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வு எழுத விலக்கு முதலமைச்சர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இறுதி பருவத்‌ தேர்வுகளைத்‌ தவிர பிற பருவப்பாடங்களின்‌ அனைத்து தேர்வும்‌ ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

இதனால்,‌ ஏப்ரல்‌-மே மாதங்களில்‌ நடைபெற இருந்த பருவ தேர்வின்‌ போது, அரியர்‌ தேர்வு எழுத கட்டணம்‌ செலுத்தி காத்திருந்த மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌. இந்த அறிவிப்பால்,‌ 1 முதல்‌ 30 பாடங்கள்‌ வரை அரியர்‌ வைத்திருந்த மாணவர்கள்‌ தேர்வு எழுதாமலேயே அந்த பாடங்களில்‌ தேர்ச்சி பெறுகின்றனர்‌. பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், பொறியியல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் அண்ணா பல்கலை கழகம் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrear pass issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->