மருத்துவ சிகிச்சை.. இ-பாஸை நிராகரித்த மாவட்ட நிர்வாகம்.. கண்ணீருடன் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் வாழைக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 48). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள டயாலிசிஸ் மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

15 நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழலில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இ-பாஸ் பெற்று தஞ்சாவூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு தளர்வு மண்டல பிரிப்பு காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரியலூரிக்கு இவர்கள் சிரமம் இன்றி பயணம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதன் காரணமாக இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 25 ஆம் தேதி சிகிச்சைக்கு இ-பாஸ் பெற விண்ணப்பித்த நிலையில், ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இ-பாஸ் நிராகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அதிகாரிகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Old man want E Pass to went Hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->