கற்களாக பெயர்ந்துபோன புதிய சாலைக்கு ரிப்பன் கட்டி திறப்பு விழா.. தொண்டர்கள் புடைசூழ அண்ணன் ச.ம.உ..! - Seithipunal
Seithipunal


அரியலூரில் மக்கள் செயல்பாட்டில் இருந்து வந்த மருத்துவமனை சாலையின் குறுக்கே ரிப்பன் வெட்டி சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அரியலூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனை பெரியார் நகர் செல்லும் சாலை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டடங்களை திறந்து வைப்பதற்கு வந்த எம்.எல்.ஏவை, தொண்டர்கள் அழைப்புவிடுத்து சாலையை திறக்க வைத்துளள்னர். 

ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர். இதுமட்டுமல்லாது அண்மையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் உள்ள சில இடங்களில் கற்கள் பெயர்ந்து, பழைய சாலையை போல காட்சி அளித்துள்ளது. 

குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களின் அழைப்பிற்கு இணங்க சாலையின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த ரிப்பனை வெட்டி திறந்து வைத்து, பழைய சாலையை திறக்க வைத்து என்ன விஷமம் இது? என்று கட்சியினரை சிரித்தபடியே கேட்டு சென்றார். 

இது குறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், " இந்த வேடிக்கையான செயல் மிகவும் வருத்தத்திற்குரியது. சாலை போடப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகி, அது ஆங்காங்கே உடைந்துவிட்டது. நல்ல சாலையாக அமைத்து ஒரு மாதம் கழித்து இதுபோல திறப்புவிழா நடத்தினாலும் பிரச்சனை இல்லை. சாலையை போட்ட பின்னர் பெய்த மழைக்கே சாலை தாங்கவில்லை என்றால், அங்கு எப்படிப்பட்ட தரத்தில் சாலை போடப்பட்டுள்ளது " என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Kunnam MLA Ramachandran Crazy Road Opening


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal