"பாத்ரூம் இல்ல, உன் கூட வரமாட்டேன்" அடம்பிடித்த மனைவியை கொன்று அருகிலேயே கணவன் செய்த செயல்.!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஜாஃபர் என்ற நபர் கறி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். கணவன், மனைவி இருவரும் உடையார்பாளையத்தில் வசித்து வந்த நிலையில், ஜெயங்கொண்டத்தில் வேலை செய்து கொண்டு ஜாபர் அன்றாடம் உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்று வந்தார். 

எனவே ஜெயங்கொண்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கே மனைவியை அழைத்துச் சென்று சில நாட்கள் தங்கி இருக்கிறார். ஆனால், மனைவி ரியாஸ் அங்கிருந்து மீண்டும் உடையார்பாளையம் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தனது மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என பலமுறை வந்து ஜெயங்கொண்டத்திற்கு ஜாபர் அழைத்துள்ளார். 

ஆனால் ஜெயங்கொண்டம் வீட்டில் குளியலறை மற்றும் கழிவறை இல்லை. எனவே, அதற்கு ஏற்பாடு செய்தால் உன்னுடன் வந்து வசிக்கிறேன். அதை முதலில் செய்து முடித்துவிட்டு, என்னை வந்து கூப்பிடு என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மது போதையில் வந்த ஜாஃபர் மீண்டும் மனைவியை வந்து அழைத்துள்ளார். அப்போது மனைவி மறுத்ததும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மனைவி இறந்து போனதை அறிந்து ஜாபர் அவருக்கு அருகில் படுத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தார். போலீசார் வரும் வரை அழுது கொண்டே இருந்த ஜாபர் போலீசார் வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ariyalur jayangondam husband killed wife


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->