சொத்து தகராறில் இளம்பெண் கொலை?... ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களது குடும்பத்தினருக்கும் - உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தாக தெரியவருகிறது. 

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். 

பின்னர் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துரிதமாக விசாரணை மேற்கொள்ள கூறி உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur girl murder police investigation


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?




கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?




Seithipunal