ஆட்சியர் அலுவலக பணியாளருக்கு கொரோனா.. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு சில இடங்களில் கடுமையான முறைகளில் பின்பற்றும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகளவு இல்லாத இடங்களில் சில தளர்வுகளுடன் மக்கள் நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் செய்து வந்தன. இதில், களத்தில் இறங்கி பணியாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், களப்பணியாளராகள் என பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதியானது. 

அரசு அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில், அவர் பணியாற்றி வந்த இடம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,324 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 1,829 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  497 பேருக்கு உறுதியாகியுள்ளது.  459 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நபருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. 

இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில், கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூடி, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ரத்னம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur District Collector Office closed temporarily


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal