பள்ளி மாணவி பாலியல் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்.சி.சி. முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு மாணவி, பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர், போலி பயிற்சியாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைது செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு போலி பயிற்சியாளர் சிவராமன் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால், சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் முறையீடு செய்தார். 

அப்போது தலைமை நீதிபதி அமர்வு இது குறித்து வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் போலீஸ் ஐ ஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி இந்த குழுவினர் நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apeal of krishnagiri school student harassment case in chennai high court


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->