காங்கிரஸ் கட்சிக்கு 10 புதிய தொகுதிகள் ஒதுக்கீடு; அந்த இடங்கள் எவை..? - Seithipunal
Seithipunal


திமுக மெகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மாற்றாக 10 புதிய தொகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சி போட்டியிடவுள்ளது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் 18 இடங்களில் நேரடியாக அதிமுகவுடன் மோதுகிறது. அதன்படி, பொன்னேரியில் அதிமுகவின் சிறுணியம் பலராமன், திருப்பெரும்புதூரில் அதிமுகவின் பழனி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் மனோகரன், கடலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.

அடுத்ததாக, சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருவாடானையில் அதிமுகவின் கீர்த்திகா, திருவைகுண்டத்தில் அதிமுகவின் சண்முகநாதன், ஊத்தங்கரையில் அதிமுகவின் தமிழ்செல்வன், துறையூரில் அதிமுகவின் சரோஜா ஆகியோரை காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக எதிர்கொள்கின்றனர்.

அடுத்து, கவுண்டம்பாளையத்தில் அருண்குமார், ஆத்தூரில் ஜெயசங்கரன், சிங்காநல்லூரில் ஜெயராமன், அம்பாசமுத்திரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கின்றனர்.  அதேபோல, அதிமுக போட்டியிடும் கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சோளிங்கர், மயிலாடுதுறை, குளச்சல், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் பாமகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. இதை தொடர்ந்து, உதகமண்டலம், விளவங்கோடு, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் பாஜக உடன் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக மோதுகின்றனர். அடுத்ததாக காரைக்குடி, நாங்குநேரி தொகுதிகளில் அமமுகவையும், கிள்ளியூரில் தாமகவையும் காங்கிரஸ் எதிர்க்கொள்ளவுள்ளது.

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சீமான், அமமுகவின் தேர்போகி பாண்டியன் ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர் நேரடியாக மோதவுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், கோவை தெற்கு, ஸ்ரீவல்லிபுத்தூர், உடுமலைப்பேட்டை, ஓமலூர் ஆகியவையும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தென்காசி, விருதாச்சலம் ஆகிய ஏழு தொகுதிகள் இந்த முறை ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலாக இம்முறை கடலூர், துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோயில் ஆகிய 10 புதிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Party Allocated 10 New Constituencies in DMK Alliance


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->