அதிகாலையில் பரபரப்பு - அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை.! 
                                    
                                    
                                   Anti corruption police raid in admk mla panneerselvam house in pandruti
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த 2011-2016 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது, இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மோசடி குறித்து பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Anti corruption police raid in admk mla panneerselvam house in pandruti